சொன்னத அப்படியே செஞ்சுட்டாரு வார்னர்: விவிஎஸ் லட்சுமனன் 1
Mumbai: Sunrisers Hyderabad’s David Warner in action during the IPL 2017 match against Mumbai Indians in Mumbai on Wednesday. PTI Photo by Mitesh Bhuvad (PTI4_12_2017_000207B)

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றார். இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடவில்லை.

இந்த வருடம் நடைபெற்ற தொடரில் பங்கேற்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 போட்டிகளில் 692 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் 8 அரைசதம் அடங்கும். சராசரி 69.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 143.86 ஆகும்.

தற்போது உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் முகாமுக்கு திரும்பியதால், 12 லீக்குடன் விடைபெற்றுவிட்டார். இந்த தொடக்குமுன், இந்தத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்று வார்னர் தலைமை பயிற்சியாளரிடம் கூறினார். அதை தற்பெருமைக்கல்ல. அதை செய்து காட்டிவிட்டார் என்று ஐதராபாத் அணியின் ஆலோசகரான விவிஎஸ் லஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.சொன்னத அப்படியே செஞ்சுட்டாரு வார்னர்: விவிஎஸ் லட்சுமனன் 2

இதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘நாங்கள் ஐதராபாத்தில் அணியின் விளம்பரத்திற்கான சூட்டிங் இருந்தோம். அப்போது தலைமை பயிற்சியாளர் டாம் மூடிக்கு டேவிட் வார்னர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் இந்த சீசனில் 500 ரன்கள் அடிப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.

அது வெற்று தற்பெருமையாக முடிந்துவிடவில்லை. அவர் ஒரு டார்கெட்டை நிர்ணயித்து, அதை சிறப்பாக எட்டி ரசிகர்களுக்கு விருந்து படைந்துள்ளார்.

வார்னரை பற்றி நான் என்ன சொல்ல முடியும்?.. அவருக்கு இந்த வருடம் மிகவும் மோசமாக இருந்தது. முழங்கை காயத்தால் அவதிப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து சில நாட்களே ஆனதால், நாங்கள் பயந்தோம். ஆனால், உண்மையிலேயே வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மனதளவில் அவரை தயார் படுத்திக் கொள்ள அவரது மனைவி மிகவும் துணையாக இருந்தது அவரின் அதிர்ஷ்டம்’’ என்றார்.

சொன்னத அப்படியே செஞ்சுட்டாரு வார்னர்: விவிஎஸ் லட்சுமனன் 3
David Warner of Sunrisers Hyderabad and Wriddhiman Saha of Sunrisers Hyderabad during match 48 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Sunrisers Hyderabad and the Kings XI Punjab held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 29th April 2019
Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதால் ஓராண்டிற்கு ஐபிஎல் உட்பட எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. தடைக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, தன்னுடைய அதிரடியால், எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *