விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் போஸ்டிடில் வந்து கமெண்ட் அடித்த டேவிட் வார்னர்!!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் விளம்பரம் மற்றும் பொழுபோது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.


தற்போது டெல்லியில் உள்ள மேட்மீ துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இன்று ஜூன்6ஆம் தேதி அதற்காக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார் விராட்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் டெல்லியில் அமைந்துள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுசிலை அருங்காட்சியகத்தில் 6ம் தேதி காலையில் என்னுடைய மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அனைவரும் வாருங்கள். செல்பி எடுத்துக் கொள்வோம் என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.
Come 6th of June, let’s play statue! ? Excited to be at #MadameTussauds ?#TussaudsDelhi@MadameTussauds@tussaudsdelhi pic.twitter.com/074c3lQF0o
— Virat Kohli (@imVkohli) June 5, 2018
இதனை பார்த்த டேவிட் வார்னர்
‘இந்த படத்தில் இருப்பது நீங்கள் தானா, ? இல்லை இதுவும் மெழுகு சிலையா? உண்மையான போட்டோவை காட்டுங்கள்.
என கமெண்ட் அடித்துள்ளார். இதனை சமூக வலைதள வாசிகள் வேடிக்கையாக சித்தரித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், இதற்கு கமெண்ட் அடித்துள்ளார். நாம் உண்மையில் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கிண்டலடித்துள்ளார். இதற்கு கோஹ்லி இன்னும் பதிலளிக்கவில்லை.
கடந்த இரு மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தது. அப்போது கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள்.
இதனால், 3 பேரும், தங்கள் பிராந்தியத்துக்கு உட்பட்ட குறைந்த மட்டத்திலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று பயிற்சி செய்து வந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்துவரும் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு ஸ்மித் சென்றுள்ளார்.
இந்நிலையில் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட டேவிட் வார்னர், பான்கிராப்ட்டுக்கு ஆஸ்திரேலிய வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் நடக்கும் கீழ்மட்ட அளவிலான, அதேசமயம் அங்கீகாரம் பெற்ற டி20, ஒருநாள் போட்டிகளில் இருவரும் பங்கேற்கிறார்கள்.