உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களை போன்று சமூக வலைத்தளங்களில் தற்போது படு பிசியாக உள்ளனர். அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
இவர் சமீபத்தில் தெலுங்கில் புட்ட பொம்மா என்ற பாடலுக்கு தனது குடும்பத்துடன் டிக்டாக் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது தமிழ் பாடல் ஒன்றுக்கு டேவிட் வார்னர் டிக்டாக் செய்துள்ளார். கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் தான் அது. வார்னர் தனது குடும்பத்துடன் நடனம் ஆடியுள்ள அந்த டிக் டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on InstagramWhen you know you have officially lost it in isolation!! ?? #canwegooutsidenowplease
A post shared by David Warner (@davidwarner31) on
இதனிடையே சமீபத்தில் டேவிட் வார்னர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உரையாடிக் கொள்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில் ரோகித் சர்மா வார்னரின் டிக்டாக் வீடியோ குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வார்னர், தனது மகளால்தான் டிக்டாக் வீடியோக்கள் செய்ய தொடங்கியதாகவும் இந்திய ரசிகர்களுக்காக இன்னும் நிறைய டிக்டாக் வீடியோக்களை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
View this post on InstagramWe are back again!! #challenge #family #boredinthehouse #isolation @candywarner1
A post shared by David Warner (@davidwarner31) on
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், ஐபிஎல்லில் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். டேவிட் வார்னர், தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை தவிர வேறு எந்த நாட்டு வீரரையுமே தேர்வு செய்யவில்லை.

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக தன்னையும் தனக்கு பார்ட்னராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார். தன்னுடன் இணைந்து கடந்த சீசனில் அசத்தலாக ஆடி எதிரணிகளை தெறிக்கவிட்ட, தனது ஐபிஎல் பார்ட்னர் ஜானி பேர்ஸ்டோவை அவர் ஒதுக்கிவிட்டார். ஆல்டைம் லெவன் அணி அல்லவா..? பேர்ஸ்டோ கடந்த சீசனில் தான் முதல் முறையாக ஆடினார். ஆல்டைம் எனும்போது நீண்டகாலமாக, சீராக ஆடிவரும், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித்தை தனது ஓபனிங் பார்ட்னராக வார்னர் தேர்வு செய்துள்ளார்.
மூன்றாம் வரிசையில் கோலியை தவிர யாருமே, யாருடைய நினைவிலும் வரமாட்டார்கள். எனவே மூன்றாம் வரிசை வீரர் கோலி தான். நான்காம் வரிசை வீரராக சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரெய்னாவையும் ஆல்ரவுண்டர்களாக அதிரடி பேட்டிங் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் மேக்ஸ்வெல்லையும் தேர்வு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் தோனியை தேர்வு செய்துள்ள வார்னர், ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய மூவரையும் ஸ்பின்னராக குல்தீப் அல்லது சாஹல் இருவரில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.