டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!! 1

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இளம் பேட்டிங் படையை கொண்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ், வலுவான பந்து வீச்சை கொண்டுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகார் தவான், கேன் வில்லியம்சன் (சி), மனிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பத்தான், விழுிமான் சஹா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

டெல்லி டேர்டெவில்ஸ்(ப்ரீத்வி ஷா, நாமன் ஓஜா, ஷ்ரியாஸ் ஐயர்), ரிஷாப் பன்ட் (வி), க்ளென் மேக்ஸ்வெல், விஜய் ஷங்கர், டேனியல் கிறிஸ்டியன், லியாம் பிளங்குட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ட்ரெண்ட் போல்ட்

டெல்லி அணி வெளியேறுவதற்கான பட்டியலில் இணையக்கூடிய அணிகளுள் ஒன்றாகவே இருக்கிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. பிளேப் ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இளம் வீரர்களான பிருத்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள ஹைதராபாத் குறைந்த இலக்கை கொடுத்தாலும் அதன் வலுவான பந்து வீச்சு குழு வெற்றியை வசப்படுத்தும் திறனை கொண்டிருப்பது பெரிய பலமாக உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள புவனேஷ்வர் குமார் இன்று களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *