இந்த வருட சிறந்த கிரிக்கெட் மாநிலமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது!
டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் இந்த வருடத்திற்கான சிறந்த கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணி சீனியர் வீர்ரகள் மற்றும் ஜூனியர் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தால் இந்த சிறப்பு விருதினை தட்டி சென்றுள்ளது டெல்லி கிரிக்கெட் நிர்வாகம்.
இந்த செய்தியை டெல்லி கிரிக்கெட் மைதான பரிமரிப்பாளர் கூறினார்.
மேலும், இது குறித்து பிசிசிஐ நிர்வாக குழுவின் உறுப்பினர் விக்ரம்ஜித் சென் கூறியதாவது,
டெல்லி அணிக்கு இந்த விருதினை கொடுப்பதில் மகிழ்ச்சி. டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் இந்த வருடம் தனது அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக ஆடியுள்ளது. மேலும் , சீனியர் அணி, ஜூனியர் அணி மற்றும் பெண்கள் அணி ஆகிய அனைத்திலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
என கூறினார்.
டெல்லி அணியின் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் தேஜஸ் பரோக்கா மற்றும் ஜாண்டி சித்து ஆகியோரை பாட்டுகிறேன். தேஜஸ் அண்டர்23 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளும், ஜாண்டி அண்டர்19 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர்.

கடந்த 16 மாதமாக டெல்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கிறேன். இது அற்புதமானது. பல தடைகளை டெல்லி நிர்வாகம் சந்திக்க வேண்டி இருந்தது. தற்போது கிட்டத்தட்ட அனைத்து நிர்வாக பிரச்னைகளும் தீர்வை எட்டியுள்ளது. இதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
என கூறினார் விக்ரம்ஜித்.