இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிலைத்தன்மையை எப்படி நிர்வகிக்கிறார் என்று தெரியவில்லை என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து நன்றாக விளையாடி வருவது மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹல், விராட் கோலி நிலைத்தன்மையை எப்படி நிர்வகிக்கிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஆட்டம் குறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘விராட் கோலி தொடர்ந்து அதிகமான ரன்கள் அடிக்கும் யுக்தியை எப்படி நிர்வகிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அடுத்த-நிலை (next-level) வீரர்.
டெத் ஓவர்களில் பந்து வீசுவது எனக்கு எளிதானது. ஏனென்றால் பவர்பிளே-யின்போது இரண்டு வீரர்கள் மட்டுமே பவுண்டரி லைன் அருகே நிற்க வைக்க முடியும். எனினும், பவர்பிளேக்குப் பிறகு, ஐந்து வீரர்களை பவுண்டரி லைன் அருகே நிறுத்தலா்ம. ஆகையால் டெத் ஓவர்களில் பந்து வீசுவது எளிது’’ என்றார்.
இந்நிலையில்,
விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி முன்னேறி வருவதை போல, அவரின் சாதனைகளும் அதிகரித்து வருகின்றன. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (International Cricket Council) விராட் கோலியை வாழ்த்தியுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் வீரர் விராட் கோலியை ஒரு சிறந்த வீரர் என்று கூறியுள்ளார். மூன்று விதமான ஆட்டங்களில் சராசரி 50க்கும் மேல் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆவார். தற்போது, அவரின் ஒருநாள் போட்டி சராசரி 60.31, டெஸ்ட் போட்டிகளில் 53.14, டி-20 கிரிக்கெட்டில் 50.85 சராசரியாக உள்ளது.
நேற்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அணிக்கு வெற்றியை கொடுத்த பிறகு தான் மைதானத்திலிருந்து வெளியே வந்தார். இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு, டி-20 போட்டிகளில் அவரது சராசரி 50க்கு மேல் எட்டியது.
விராட் கோலியின் சாதனையை ஐ.சி.சி ட்வீட் செய்து வாழ்த்தியது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடியும் ட்வீட் செய்துள்ளார். அவர், தனது ட்வீட்டரில், ‘விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள்! இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். அதன்மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவும் எனக் கூறியுள்ளார்.
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019