தீபக் சாஹர் காயம்: அணிக்கு புதிய இளம் பந்துவீச்சாளர் அழைப்பு! 1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருக்கிறது.

 

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்றப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் முதுகில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து சாஹர் நீக்கப்பட்டுள்ளார்.தீபக் சாஹர் காயம்: அணிக்கு புதிய இளம் பந்துவீச்சாளர் அழைப்பு! 2

இதனையடுத்து அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் சைனி, அண்மையில் ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ள நிலையில், கடைசி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கில் நடைபெறவுள்ளது.

ரோஹித் சாதனைகள்

இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை (1300+) பதிவு செய்த வீரா்களில் ரோஹித் முதலிடம் பிடித்தாா்.

கோலி 1292 ரன்களுடன் இரண்டாவது இடம் பிடித்தாா். ஷாய் ஹோப் (மே.இ.தீவுகள்), ஆரோன் பின்ச் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனா்.

இந்த ஆண்டில்

ஒரு நாள் ஆட்டத்தில் ரோஹித் பதிவு செய்த 7-ஆவது சதம் இதுவாகும்.

இதற்கு முன்பு சச்சின் 1998-இல் 9 சதங்களை பதிவு செய்துள்ளாா்.

2000-ஆவது ஆண்டில் கங்குலி 7 சதங்களையும், 2016-இல் டேவிட் வாா்னா் (ஆஸி.) 7 சதங்களையும் பதிவு செய்துள்ளனா்.தீபக் சாஹர் காயம்: அணிக்கு புதிய இளம் பந்துவீச்சாளர் அழைப்பு! 3

தொடக்க ஆட்டக்காரா்களாக களமிறங்கி இந்தியாவுக்காக அதிக ரன்கள் (227) பதிவு செய்தவா்களின் பட்டியலில் ரோஹித்-ராகுல் இணை இடம்பெற்றுள்ளது.

முதலிரண்டு இடங்களில் டெண்டுல்கா்-கங்குலி இணையும், தவன்-ரஹானே இணையும் உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கும் அதிகமாக (8 முறை)பதிவு செய்ததிலும் ரோஹித் முதலிடம் வகிக்கிறாா். வாா்னா் 6 முறையும், சச்சின், கெயில் தலா 5 முறையும் 150-க்கும் அதிகமான ரன்களை பதிவு செய்துள்ளனா்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *