சமீபத்தில் வெளியான பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோன், அந்த படத்தில் சிறப்பாக நடித்ததால் அவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம், ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. இந்நிலையில் தனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரரின் பெயரை கூறினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.
பத்மாவதி திரைப்படத்தின் பட பிடிப்பின் போது அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கூறினார் படுகோன். கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளில் தீபிகா படுகோன் கலந்து கொண்டு இருக்கிறார். பல ஐபில் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ள தீபிகா படுகோன், பல ஐபில் போட்டிகளை நேரடியாகவும் கண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் தீபிகா படுகோனின் பிடித்த கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் தோனியின் பெரிய ரசிகை என்றும் கூறினார். அவர் தோனியின் பெயர் கூறாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக பல சாதனைகள் புரிந்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக்கோப்பை, 50-ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என முக்கிய டிராபிகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. அதே போல் ஐபில் தொடரில் சென்னை அணிக்காக இரண்டு கோப்பைகளை வாங்கி கொடுத்துள்ளார் தோனி.
2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். அடுத்து வரும் ஐபில் ஏலத்திற்கு முன்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்து கொண்டுள்ளது.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
தொடக்கத்தில் தோனியும் தீபிகா படுகோனும் காதலிக்கிறார்கள் என தகவல்கள் வந்தன. முதலாம் ஆண்டு ஐபில் தொடக்க விழாவிலும் இதை வைத்து தோனியை கலாய்த்தார் ஷாருகான். ஆனால், அது உண்மை அல்ல என நிரூபிக்க 2010ஆம் ஆண்டு சாக்சியை திருமணம் செய்து கொண்டார் தோனி.