டெல்லியில் புகைமூட்டம் காரணமாக இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடத்துவது பற்றி பேசினார் இந்த போட்டியின் ரெப்ரீ டேவிட் பூன்.
இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு இலங்கை அணியின் அறைக்கு சென்ற போட்டியின் ரெப்ரீ டேவிட் பூன், வீரர்கள் அவதிப்பட்டதாக கூறினார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது நான்கு இலங்கை வீரர வாந்தி எடுத்ததாகவும், சில வீரர்களுக்கு காற்று தேவை பட்டதாகவும் கூறினார்கள். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் லஹிரு கமகே, சுரங்கா லக்மல் மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் இதனால் அவதிப்பட்டதாகவும் கூறினார்கள்.
இரண்டு அணிகளில் கேப்டன்களும் போட்டியை நிறுத்த ஒப்புக்கொண்டாலோ அல்லது இப்போட்டியை தொடர்ந்து தொடர்ந்து விளையாடினால் உடலுக்கு ஆபத்து என மருத்துவர்கள் அறிவித்தாலோ, இந்த போட்டியை ரத்து செய்யப்படும். இல்லை என்றால், இந்த நிலைமையை இந்திய வீரர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று பார்ப்பார்கள்.
இரண்டாம் நாள் உணவு இடைவெளிக்கு முன்பு குல்தீப் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ஒரு சில வீரர்கள் மாஸ்க் போட்டிருந்ததாக தகவல் வந்தது. அதன் பிறகு இலங்கை வீரர்கள் மாஸ்க் வாங்கி கொண்டு வர சொன்னார்கள். முதலில் ஒரு சில இலங்கை வீரர்கள் மாஸ்க் மாட்டி இருந்தார்கள், அதன் பிறகு அனைத்து இலங்கை வீரர்களும் மாஸ்க் போட்டு கொண்டார்கள்.
©BCCI
“எங்கள் பந்து வீச்சாளர்கள் மாசு பிரச்சனையால் திணறினார்கள். எங்கள் அறையில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் வாந்தி எடுக்கும் போது, போட்டியின் ரெப்ரீ எங்கள் அறையில் தான் இருந்தார், மருத்துவரும் இருந்தார்,” என இலங்கை அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.
இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இலங்கை வீரர்களை ஜூஸ் மற்றும் பழங்களை சாப்பிட சொன்னார் மருத்துவர். முரளி விஜய், ரவி அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் திணறிய போது இரண்டாவது ஆட்டத்தை முடித்து கொண்டார்கள்.