ஆட்டநாயகன் விருது தவானுக்கு…

ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

பெங்களூருவில் ஆப்கானிஸ்தான் இந்தியா இரு அணிகளும் மோதின. டெஸ்ட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது முதல் போட்டியாகும். இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணியின் ஷிகர் தவான் பவுண்டரிகளாக விளாசினார். இவர் 96 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும். மேலும், ஒரு சேஷனில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். இதனால் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இது குறித்து தவான் கூறுகையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் எண்ணம் போலவே பந்துகளும் வந்தது, அதனால் பவுண்டரிகள் அடிக்க முடிந்தது. நான் தெளிவாக இருக்கிறேன். நிதானமாகவும், அதே நேரம் அதிரடியாகவும் ஆட வெண்டும் என்று. சீக்கிரமாக முடிந்தது ஓய்வு எடுக்க உதவியாக இருக்கும். அயர்லாந்து செல்ல குறைவான காலமே உள்ளது என்றார்.

மேலும் அவர், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள். இது அவர்களுக்கு முதல் படிக்கட்டு, அவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். துவண்டு விடாமல் முயற்சிகள் செய்துகொண்டே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

Vignesh G:

This website uses cookies.