கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்கரராக களமிறங்கி ரன்களை குவித்து அசத்திய KL ராகுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனியை புகழாரம் சூட்டியுள்ளார்.
தோனி கடந்த இரண்டு மூன்று சீன்களாக பெருமளவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோபிக்கவில்லை. எனினும் கேப்டன் பொறுப்பில் சிறந்து விளங்கினாலும் இந்த ஐபில் போல் ரன் குவிக்கவில்லை.
இந்த ஐபில்லில் தொடக்கம் முதலே தோனியின் சிக்சர் மழை ரசிகர்களின் மேல் பொழிய துவங்கியது அதற்கும் மேலாக இரண்டு வருட தடைக்கு பின் இது போன்ற ஒரு ஆட்டம் என்றால் சொல்லவா வேண்டும். சென்னை ரசிகர்கைளயும் மீம் கிரியேட்டர்களையும் கையில் பிடிக்கவே முடியவில்லை. சும்மா தெறிக்க விட்டுட்டாங்க..
இந்த சீசனில், 15 இன்கிங்ஸ்னிங்சில் 455 ரன்கள் குவித்தார் தோனி. இதில் 30 சிக்சர்களும் 24 நான்கு ரன்களும் அடங்கும். அதுமட்டுமில்லாமல், 75.83 சராசரியுடன் அதிக சராசரி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கூடுதலாக, அவரது ஸ்ட்ரைக் ரேட் 150.66 என்பது குறிப்பிடதக்கது.
வரும் ஜூலை மாதத்துடன் 37 வயதை நிறைவு செய்யும் தோனி இப்படி ஒரு ஆட்டத்தை முன்பில்லாத அளவிற்கு வெளிப்படுத்தியது அவரின் ஹேட்டர்ஸ்க்கு அவரின் பாணியிலேயே பதில் கூறியது மேலும் சிறப்பு.
வழக்கமாக ஐந்து ஆறாவதாக களமிறங்கும் தோனி இம்முறை மூன்றாவது நான்காவதாக களமிறங்கி விளாசியது தோனி மற்றும் சென்னை ரசிகர்களுக்கு கூடுதல் ட்ரீட்.
இதுகுறித்து பேட்டியாளர்களிடம் KL ராகுல் கூறியதாவது, ” தோனியின் ஆட்டத்தை பார்க்க எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற இளம் வீர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஐபில் அவர் ஆடிய விதம் எதிர் அணிக்கு மிகுந்த பயம் உண்டாக்கியிருக்கும். அவருக்கு இது 100வதா.. 200வது கோப்பையா (சிரிப்பாக).. கோப்பையை வென்றபோதும் கூட அவரின் ரியாக்ஷன் முன்பு போலவே இருக்கும் இது அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டியது. அவர் ஒரு சிறந்த பினிஷர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை”
KL ராகுல் இந்த ஐபில்லில் 659 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளசியவர்கள் பட்டியலில் மூன்றாவது மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும், இந்த வருடம் கெயில் உடனான துவக்கம் சிறப்பான அனுபவமாக அமைந்தது மற்றும் அஸ்வின் சிறந்த கேப்டன்ஷிப் வெளிப்படுத்தினார் எனவும் கூறினார்.