இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 1

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி “த்ரில்’ வெற்றி கண்டது.
ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 2
முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய சென்னை 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வென்றது.
ஐபிஎல் போட்டியின் 11-ஆவது சீசன் மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மும்பையில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் விக்கெட்டாக எவின் லீவிஸ் டக் அவுட்டாகினார்.இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 3
தொடர்ந்து களம் கண்ட இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ரோஹித் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். இஷான்-சூர்யகுமார் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார்.
இஷான் கிஷன் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 40 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இறுதியாக பாண்டியா சகோதரர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதில் ஹார்திக் பாண்டியா 2 பவுண்டரிகள் உள்பட 22, கிருணால் பாண்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் எடுத்திருந்தனர். சென்னை தரப்பில் ஷேன் வாட்சன் 2, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 4
பிராவோ அசத்தல்: பின்னர் பேட் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் வாட்சன் 16, உடன் வந்த அம்பட்டி ராயுடு 22 ரன்களில் வெளியேறினர். ரெய்னா 4 ரன்களில் நடையைக் கட்ட, கேதார் ஜாதவ் 14 ரன்களுக்கு “ரிடையர்ட் ஹர்ட்’ முறையில் பெவிலியன் திரும்பினார்.
தொடக்கம் முதலே தடுமாறிய சென்னை, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் தோனி 5, ஜடேஜா 12 ரன்களுக்கு வெளியேற, களம் கண்டார் டுவைன் பிராவோ. மறுமுனையில், சாஹர், ஹர்பஜன், மார்க் வுட் விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ, இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 5பிராவோ அதிரடி ஆட்டத்தால் அணியை மீட்டெடுத்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் மீண்டும் களம் கண்ட கேதார் ஜாதவ், ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 24, இம்ரான் தாஹிர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் ஹார்திக், மார்கன்டே தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, முஸ்டாஃபிஸýர், மெக்லனகன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இது தான் சென்னை!! இப்படித்தான் நாங்க வளந்தோம்! பிராவோ எப்போவும் அப்பத்தான் : பெருமை கொள்ளும் தல தோனி 6
முன்னதாக, ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலில் பாலிவுட் நடிகர் வருண் தவன், பின்னர் நடிகர் பிரபு தேவா, தொடர்ந்து நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது. பாலிவுட் பாடகர் ஹனி சிங்கின் பாடல் பாடினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *