'செமி பைனலில் தோனிக்கு கொடுக்கப்பட்ட வேலை இதுதான்..' ஆனால் அவர்.... வித்யாசமாக பேசும் விராட் கோலி 1

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோற்று இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.

போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தத் தோல்வியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் மனதளவில் நாங்கள் பெரிய கஷ்டத்தில் இருக்கிறோம். இதற்காக பல நாட்கள் நாங்கள் கடும் பயிற்சி எடுத்தோம். இதை மனதில் கொண்டுதான் தொடர்ந்து உழைத்தோம்.

'செமி பைனலில் தோனிக்கு கொடுக்கப்பட்ட வேலை இதுதான்..' ஆனால் அவர்.... வித்யாசமாக பேசும் விராட் கோலி 2
India’s Rishabh Pant (right) walks off dejected after losing his wicket during the ICC World Cup, Semi Final at Old Trafford, Manchester. (Photo by David Davies/PA Images via Getty Images)

லீக்கில் நன்றாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதலிடம் கூட வந்தோம். ஆனால் ஒரே ஒரு நாள் சரியாக விளையாடாமல் போனது எங்கள் ஆட்டத்தை முடக்கிப்போட்டுள்ளது. ஒரே ஒரு நாள் ஆட்டம் எங்கள் கனவுகளை சிதைத்துவிட்டது. ஃபிளே ஆப் சுற்றுக்குப் பதில் நாக் அவுட் சுற்று வைத்தது ஒரு காரணம்.

நாங்கள் பேட்டிங் செய்த முதல் 45 நிமிடங்கள்தான் போட்டியை மாற்றியது. ஆனால் நாங்கள் போராடாமல் தோல்வி அடையவில்லை. அணியின் ஸ்கோர் போர்டை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். கடைசி நொடி வரை வெற்றிக்காகப் போராடினோம்” எனத் தெரிவித்தார் கோலி.

“தோனிக்கு கொடுக்கப்பட்ட வேலை இதுதான்” : தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேட்டி!

தோனியின் படு நிதானமான ஆட்டம் பற்றிப் பேசும்போது, ”ஜடேஜா ஒருமுனையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட் விழுந்தாலும் புவனேஷ்வர் குமார் முதலான பந்துவீச்சாளர்கள்தான் களமிறங்க முடியும் என்ற நிலை. அந்த சூழலில் ஜடேஜாவுக்கு ஏற்றபடி தோனி சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.” என்றார் கோலி

மேலும் பேசிய அவர், ‘‘தோனியை சூழலுக்கு தகுந்தவாறு சவாலான கட்டத்தில் களமிறக்க முடிவு செய்திருந்தோம். இதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை. கடைசி சில ஓவர்களில் இறங்கி ரன்களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கான பணி. இந்தப் போட்டியில் தோனிக்கு கொடுக்கப்பட்ட ஏழாம் நிலையில் களமிறங்கி ரன்களைச் சேர்க்கவேண்டும் எனும் வேலையை அவர் சிறப்பாகவே செய்தார்’‘ என விராட் கோலி கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *