முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் வீரர் மகேந்திர சிங்க் தோனி யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் நடக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபில் தொடர் 10 தொடங்குவதற்கு முன்னதாகவே தோனியை புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.
ஐபில் தொடர் 10 போட்டிகள் தொடங்கியது முதல் புனே அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயின்காவின் சகோதரர், ஹர்ஸ் கோயின்கா டுவிட்டரில் தோனியை குத்திக்காட்டுவது போல பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்த ஐபில்-இல் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஆட்டமும் விளையாடவில்லை மகேந்திர சிங்க் தோனி. இதனால், தோனிக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், தோனிக்கு ஆதரவு அளிப்பவர்கள் பட்டியல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பிரெட் லீ-இல் தொடங்கி விரேந்தர் சேவாக், பென் ஸ்டோக்ஸ் மற்றும் தற்போது முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆதரித்துள்ளார்.
வார்னே அவரது ட்விட்டர் பக்கத்தில்,” தோனி இனி எதையும் யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இதை அவர் ஏற்கனவே அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் நிரூபித்துவிட்டார். அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன்,” என அதில் குறிப்பிட்டுள்ளார்.