தோனியிடம் 100 பைக் இருந்தாலும் அவருக்கு பிடித்த 2 பைக் இதுதான்: மனைவின் சாக்சி வெளியிட்ட ரகசியம் 1

தோனி ஒரு பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. கல்லூரி காலத்திலிருந்தே பைக்குளின் மீது தீராதக் காதல் கொண்ட தோனி முதல்முறையாக யமஹாஆர்டி350 ரக பைக்கை வாங்கி பயன்படுத்தினார். இன்றும் கூட அந்த பைக்கானது தோனியின் வீட்டில் உள்ளது.

அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய ஷாக்‌ஷி, தனது கணவர் தோனியிடம் 9 பைக்குகள் உள்ளன என்றும் பைக்குகளின் உதிரிப் பாகங்களை வாங்கி அவரே அதனை வடிவமைப்பார் என்றும் அவ்வாறு வடிவமைக்கும் போது ஏதேனும் பாகத்தைப் பொருத்த மறந்து விட்டால் மறுநாள் மீண்டும் அனைத்து பாகங்களையும் கழற்றி விட்டு மீண்டும் முதலிலிருந்து வாகனத்தை வடிவமைக்கத் தொடங்குவார் என்றும் கூறினார்.தோனியிடம் 100 பைக் இருந்தாலும் அவருக்கு பிடித்த 2 பைக் இதுதான்: மனைவின் சாக்சி வெளியிட்ட ரகசியம் 2

ஊரடங்கு காலங்களில் தோனி குறித்தும் அவரது செயல்பாடுகள் பற்றியும் ஷாக்‌ஷி தோனி தொடர்ந்து அவரது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பைக்கில் மகள் ஷிவாவுடன் தோனி தனது வீட்டில் ரைடு அடித்த வீடியோவை அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தோனியிடம் 100 பைக் இருந்தாலும் அவருக்கு பிடித்த 2 பைக் இதுதான்: மனைவின் சாக்சி வெளியிட்ட ரகசியம் 3அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

யமஹாஆடி350, Ducati 1098, கவாசகி நின்ஜா ZX-14R எனப் பல ரக பைக்குகளை சேகரித்து வைத்திருந்தாலும் அவரது சேகரிப்பில் அவருக்குப் பிடித்தமானவை Kawasaki Ninja H2 , the Confederate X132 Hellcat தான். கடந்த 2015 ஆம் ஆண்டு Ninja H2 புதிதாக வெளிவந்த போது அதனை முதலில் வாங்கி Ninja H2 ரக பைக்கின் முதன் வாடிக்கையாளராக தோனி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கதுவ்தோனியிடம் 100 பைக் இருந்தாலும் அவருக்கு பிடித்த 2 பைக் இதுதான்: மனைவின் சாக்சி வெளியிட்ட ரகசியம் 4

இந்நிலையில் தோனியின் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் தான் வாங்கி இருக்கும் புதிய டிராக்டரை தோனி ஓட்டி வருகிறார். அந்த வீடியோவுக்கு மெளன ராகம் திரைப்படத்தில் வரும் இளையராஜாவின் இசையை கோர்த்து வெளியிட்டுள்ளது சிஎஸ்கே. ‘இளையராஜாவுடன் தல தோனியின் சந்திப்பு” என அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசையோடு தோனி டிராக்டர் ஓட்டும் அந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *