இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 6ஆம் தேதி முடிவடைகிறது. டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டிசம்பர் 10ஆம் தேதி ஒஐனால் தொடர் துவங்குகிறது. இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாபில் மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியுடன் தோனி ஓய்வு பெறுகிறார்.

தோனி இந்திய அணிக்காக கடந்த 13 வருடங்களாக ஆடி வருபவர். இவர் தலைமையில் இந்திய அணி இரண்டு உலக்கக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் கேப்டனாகவும் பேட்ச்மேனாகவும், கீப்பராகவும் பலவேறு சாதனைகளை புரிந்துள்ளார். ஆனால், ஓய்வு பெறப்போவது மகேந்திர சிங் தோனி இல்லை, சண்டிகர் காவல் துறைக்கான கடந்த 10 வருடங்களாக உழைத்து வரும் தோனி என்ற லேப்ராடர் வகை நாய் ஓய்வுபெறப்போகிறது.

ஆம், கடந்த 10 வருடங்களாக பஞ்சாபின் சண்டிகர் காவல்துறைக்காக உழைத்து வரும் நாய் தோனி.வெடி குண்டுகள் கண்டுபிடிக்க பயன்படுகிறது இந்த நாய். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது, இந்த போட்டியில் பாதுகாப்பு பணிக்காக லேப்ராடர் தோனி ஈடுபடவுள்ளது. அதனுடன் சேர்த்து கடந்த 10 வருடமாக உழைத்து வரும் தோனிக்கு சிறிய பிரியா விடை கொடுத்து ஓய்வு கொடுக்க முடிவு செய்யவுள்ளது சண்டிகர் காவல்துறை.
இது குறித்து சண்டிகர் காவல்துறை அதிகாரி அம்ரித் சிங் கூறியதாவது,
தோனி எங்களுடன் கடந்த 10 வருடமாக உழைத்து வருகிறான். 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையே இங்கு தான் நடந்தது. அந்த போட்டியின் போது அற்புதமாக பாதுகாப்பு வேலைகளை செயதவன் தோனி.
தற்போது எங்களை விட்டு ஓய்வு பெறப் போகிறான். அவன் ஒரு நாளைக்கு 3 லிட்டர் பால், 20 முட்டை சாப்பிடுவான். 7 மணி நேரம் உறங்குவான்.
எனக் கூறினார் அம்ரித் சிங்