இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சாளர்களை துவைத்து எடுத்தது. ஒருகட்டத்தில் 2 விக்கெட் விழுக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் பேட்டிங் செய்ய வந்தார்.
ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரின் இரண்டாவது பந்தில் தூக்கி அடிக்க நினைத்த மார்கன், பந்தினை நன்றாக தலைக்கு மேலே பறக்க விட்டார். சரியாக பேட்டிங் ஸ்டம்பின் மீது மிக அதினமான உயரம் சென்ற பந்தினை பிடிக்க பந்து வீசிய ஹர்திக் பாண்டியவும், கீப்பரான தோனியும் வேகமாக வந்தனர்.
இடையில் தோனி, அதனை நான் பிடித்துப் கொள்கிறேன் என கூற ஹர்திக் பாண்டியா விலகிவிட்டார். இந்த கேட்ச்சினை எப்ப்டியவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் மேலே பார்த்துக்கொண்டே பந்தில் தனது முழு கவனத்தையும் வைத்து வந்த தோனி, பந்தை சரியாக பிடித்தார்.
பிடித்த இடத்தில் இருந்த மூன்று ஸ்டம்புகளின் மீது தோனி விழுந்தாலும், அந்த கேட்ச்சினை தறவிடாமல் தன் கிளவுஸில் வைத்துக்கொண்டார்.
What a brilliant catch by MS Dhoni. #INDvENG https://t.co/keN4o37QR8
— Khurram Siddiquee (@iamkhurrum12) July 8, 2018