'என்ன பாத்தா லூசு மாரி தெரியுதா' 'நான் 300 போட்டி ஆடிருக்கேன்' - குல்தீப்பை மிரட்டிய தோனி 1

எப்போதும் அமைதியாகவும், பொறுமையாகவும் காணப்படுபவர் கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் மஹேந்திர சிங் தோனி. ‘சாது மிரண்டால் காடு தாங்காது’ என்பதக்கேற்ப அவ்வப்போது இவர் கோபம் வெளிப்படுவதும் உண்டு. அத்தகைய சம்பவம் பற்றி இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் சிங் மனம் திறந்துள்ளார்.

கடந்த 2017 -ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளரான குல்தீப்பிடம் களத்தில் தோனி கடிந்து கொண்டார்.'என்ன பாத்தா லூசு மாரி தெரியுதா' 'நான் 300 போட்டி ஆடிருக்கேன்' - குல்தீப்பை மிரட்டிய தோனி 2

அச்சமயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விஷயம் தற்போது அடங்கியிருக்கும் நிலையில், அது பற்றி சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் சஹல்,குல்தீப் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இளம் வீரரான குல்தீப்பிடம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த இலங்கை கிரிக்கெட் தொடர் பற்றியும், தோனியுடனான அனுபவம் பற்றியும் கேட்கப்பட்டது. அது குறித்து அவர் பேசுகையில்,'என்ன பாத்தா லூசு மாரி தெரியுதா' 'நான் 300 போட்டி ஆடிருக்கேன்' - குல்தீப்பை மிரட்டிய தோனி 3

போட்டி நடந்த இன்டோர் மைதானம் மிகவும் சிறியது. குல்தீப் வீசிய பந்துகள் எல்லாம் சிக்ஸருக்கு பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு சிக்ஸர் போகும்போதும் தோனியைப் பார்ப்பாராம் குல்தீப். இதையடுத்து, தோனி அவ்வப்போது ஃபீல்டை மாற்ற டிப்ஸ் சொல்வாராம்.

நான்காவது ஒவரில், ஃபீல்டிங்கை மாற்றுமாறு தோனி சொல்ல, “இருக்கட்டும்.. பரவாயில்லை மஹி பாய்” என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு எரிச்சலடைந்த தோனி, “நான் என்ன பைத்தியமா? நான் 300 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளேன்” என்று கடிந்துள்ளார்.'என்ன பாத்தா லூசு மாரி தெரியுதா' 'நான் 300 போட்டி ஆடிருக்கேன்' - குல்தீப்பை மிரட்டிய தோனி 4

சுதாரித்து ஃபீல்டை மாற்றிய அடுத்த பந்தில் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார் குல்தீப். பின்னர் அவரிடம் வந்து, “இதைத் தான் நான் சொன்னேன்” என்று கூலாக செல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

https://www.instagram.com/p/BlC5DGlg4_9/?utm_source=ig_embed

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *