பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக வரும் தோனி: செம்ம கொண்டாடத்தில் ரசிகர்கள்! 4

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே நாளை தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தொடங்க உள்ளது.

பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக வரும் தோனி: செம்ம கொண்டாடத்தில் ரசிகர்கள்! 5

இந்நிலையில் இந்தப் போட்டியை நேரில் காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியை தோனி தனது சிறு வயது நண்பரும் ஜார்கண்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான மிஹிர் திவாகருடன் இணைந்து பார்க்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதற்காக இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து நாளை அதிகாலை ராஞ்சி வர உள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அத்துடன் அவர் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தோனி நாளை போட்டியை காண வர உள்ளது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக வரும் தோனி: செம்ம கொண்டாடத்தில் ரசிகர்கள்! 6

இந்நிலையில்,

இந்த தொடரில், தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்கார் மார்க்ரம் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்தார். 2வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்ததும் எதிர்முனையில் இருந்த சக ஆட்டக்காரர் டீன் எல்கரிடம் விவாதித்துவிட்டு அப்பீல் கேட்காமல் வெளியே சென்றார். ஆனால், டிவி ரீப்ளேவில் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று தெரிந்தது.

பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக வரும் தோனி: செம்ம கொண்டாடத்தில் ரசிகர்கள்! 7

இதனால் டிரெஸ்சிங் ரூம் சென்ற அவர், ஆத்திரத்தில் திடமான பொருள் ஒன்றின் மீது கையால் குத்தினார். இதில் அவரது மணிகட்டில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்தபோது லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவர், கடைசி டெஸ்ட் போட்டி யில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக வேறு வீரர் நியமிக்கப் படவில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், ஆத்திரத்தில் டிரெஸ்சிங் ரூம் சுவரில் கையால் குத்தியதில் காயமடைந்தார். அதே போல இப்போது மார்க்ரமும் காயமடைந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *