லார்ட்ஸ் மைதானத்தில் தோனி விளையாடிய விதம், தனது 174 பந்தில் 36 ரன்கள் எடுத்த ஆட்டத்தைவிட படு கேவலமாக இருந்தாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நடந்தது.
இதில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் தோனியின் பேட்டிங் குறித்து மீண்டும் விமர்சனங்கள் தலை தூக்கியுள்ளது. இப்போட்டியில் தோனி மிகவும் மெதுவாக விளையாடியதாகவும், எவ்வித போராட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தோனியின் பினிஷிங் திறமை மீண்டும் சர்ச்சையில்
சிக்கியுள்ளது.
படு மொக்கை:
சுமார் 43 ஆண்டுக்கு முன் கடந்த 1975ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, 60 ஓவர்கள் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 335 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கவாஸ்கர் ஆமை வேகத்தில் 174 பந்தில் 1 பவுண்டரி அடித்து 36 ரன்கள் எடுத்து
அவுட்டாகாமல் இருந்தார். இன்று வரை படுமோசமான பேட்டிங்காக இன்று வரை கவாஸ்கரின் இன்னிங்ஸ் விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் 59 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் தோனியின் ஆட்டம் 174 பந்தில் 36 ரன்கள் எடுத்த ஆட்டத்தைவிட படு கேவலமாக இருந்தாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.இருந்தாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘தற்போதுள்ள சிறந்த பினிஷர்களில் தோனியும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பீல்டர்களுக்கு நேராக பந்தை அடித்தது, ரன்கள் எடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியது. இதனால், களத்தில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதை அடுத்த போட்டியில் இந்திய வீரர்கள் மாற்றிக்கொள்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் தோனியின் ஆமை வேக ஆட்டம் என் பழைய மோசமான நினைவுகளை எனக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.’ என்றார்