ஜூலை 26 முதல் துவங்கவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 22 பேர் கொண்ட ஒருநாள் அணியை இலங்கை அறிவித்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019-இல் அணியை வழிநடத்திய திமுத் கருணாரத்ன, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் மிகமோசமாக அணியை வழிநடத்திய திமுத் கருணாரத்னே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய திருப்பமாக அவர் மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.மேலும், அடுத்த தொடருக்கான இலங்கை அணி அவர் வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
3 ஒருநாள் போட்டிகளில் முதலாவது போட்டி ஜூலை 26 ம் தேதியும், இரண்டாவது இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூலை 28ம் தேதியும், இறுதிப் போட்டியும் ஜூலை 31 ஆம் தேதியும் கொழும்பின் ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி :
- திமுத் கருணாரத்னா (கேப்டன்),
- குசல் பெரேரா,
- அவிஷ்கா பெர்னாண்டோ,
- குசால் மெண்டிஸ்,
- ஏஞ்சலோ மேத்யூஸ்,
- லஹிரு திரிமனே,
- ஷெஹன் ஜெயசூரியா,
- தனஞ்சய டி சில்வா,
- நிரோஷன் டிக்வெல்லா,
- தனுஷ்கா குணதிலகே,
- தசுன் ஷானகா,
- வசிணிலா ஹசானா
- மலிங்கா,
- நுவான் பிரதீப்,
- கசுன் ராஜிதா,
- லஹிரு குமாரா,
- திசாரா பெரேரா,
- இசுரு உதனா,
- லஹிரு மதுசங்கா.