எங்களது பந்துவீச்சாளர்கள் மற்றும் ரஸல் ஆகியோர்தான் வெற்றிக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் 1

எங்களது பந்துவீச்சாளர்கள் மற்றும் ரஸல் ஆகியோர்தான் வெற்றிக்கு காரணம் என கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை. முதலில் ஆடிய கொல்கத்தா 232/2 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 198/7 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பவுலிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து கொல்கத்தா தரப்பில் கிறிஸ் லீன் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினர்.

2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 54 ரன்களை விளாசிய கிறிஸ் லீன், ராகுல் சஹார் பந்தில் வெளியேறினார். இது அவர் எடுக்கும் 10}ஆவது ஐபிஎல் அரைசதமாகும். எங்களது பந்துவீச்சாளர்கள் மற்றும் ரஸல் ஆகியோர்தான் வெற்றிக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் 2

இளம் வீரர் ஷுப்மன் கில் 32 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். தனது 3}ஆவது ஐபிஎல் அரைசதத்தையும் பதிவு செய்தார். 4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் கில்லை அவுட்டாக்கினார் ஹார்திக் பாண்டியா.
வழக்கம் போல் ரஸ்ஸல் மும்பையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி, தனது 8}ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 8 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார் ரஸ்ஸல். கேப்டன் தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 232 ரன்களை குவித்தது கொல்கத்தா. மும்பை தரப்பில் ராகுல் சஹார், ஹார்திப் பாண்டியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தனர் கொல்கத்தா அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
233 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது.

எங்களது பந்துவீச்சாளர்கள் மற்றும் ரஸல் ஆகியோர்தான் வெற்றிக்கு காரணம்: தினேஷ் கார்த்திக் 3
அதிரடி வீரர் குயிண்டன் டி காக்கை டக் அவுட்டாக்கினார் சுனில் நரைன். 3 பவுண்டரிகள் விளாசி 12 ரன்களை எடுத்த ரோஹித் சர்மாவை எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார் குர்னே. எவின் லெவிஸ் 15 ரன்களுடன் ரஸ்ஸல் பந்தில் அவுட்டானார். ஒரளவு நிலைத்து ஆட முயன்ற சூரியகுமார் யாதவ் தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 26 ரன்களை சேர்த்து ரஸ்ஸல் பந்தில் வெளயேறினார்.
20 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்ட், நரைன் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

சிக்ஸர் மழை பொழிந்த ஹார்திக் பாண்டியா தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
17 பந்துகளில் துரிதமாக 50 ரன்களை விளாசி புதிய ஐபிஎல் சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு ரிஷப் பந்த் வசம் இந்த சாதனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
9 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசிய ஹார்திக், குர்னே பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சகோதரர் க்ருணால் பாண்டியா 24 ரன்களுடன் அவுட்டானார். சரண் 3, சஹார் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் 2}25, குர்னே 2}37, சுனில் நரைன் 2}44 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *