2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
1995-96-ல் பஞ்சாப் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் தினேஷ் மோங்கியா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மோங்கியா, 57 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் ஒரு டெஸ்டிலும் விளையாட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்திய அணியின் முதல் சர்வதேச டி20 ஆட்டத்தில் இடம்பெற்ற மோங்கியா 38 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர் மோங்கியா தான்.
2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றது இந்திய அணி. இந்திய அணியில் கும்பிளேவை சேர்க்காமல் ஆல்ரவுண்டர் என்கிற காரணத்துக்காக மோங்கியாவை ஆட வைத்தார் கேப்டன் கங்குலி. பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ரன்கள் கொடுத்தார் மோங்கியா. பேட்டிங்கில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார்.
பிசிசிஐயால் அங்கீகரிக்காத ஐசிஎல் அமைப்பில் சேர்ந்து விளையாடியதால் பிறகு மோங்கியாவால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போனது. கடந்த வருடம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 42 வயது மோங்கியா, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ரோகித் சர்மாவை துவக்க இடத்தில் களம் இறக்குவது சரியாக இருக்காது என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயன் மோங்கியா கூறுகையில் ‘‘தொடக்க பேட்ஸ்மேன் என்பது விக்கெட் கீப்பர் பணி போன்று சிறப்புமிக்க வேலை. ரோகித் சர்மா ஒயிட்-பால் மேட்சியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
மாறாக ஒயிட்-பந்தில் எப்படி விளையாடுகிறாரோ, அதைபோல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்ற வகையில் தனது ஆட்டத்தை மாற்றுவதை விட, ரோகித் சர்மா அவரது ஆட்டதிறன் மீது உறுதியாக இருக்க வேண்டும். ஒருவேளை டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவகையில் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டால், அது ஒயிட்-பால் போட்டி ஆட்டத்தை பாதிக்கலாம்’’ என்றார்.