இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சஹால், டோனி அவரிடம் தன்னை சார் என்று கூப்பிட வேண்டாம் என செல்லமாக கூறியதாக என தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால். கடந்த 2016-ம் ஜிம்பாப்வே தொடரின்போது இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்களது சுழற்பந்துவீச்சு எதிரணிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக மாறியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கத் தொடரின்போது, குல்தீப்யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோரின் லெக்ஸ்பின், கூக்ளி பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் திணறியதை அறிந்தோம். கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக ரவிந்திர ஜடேஜாவுக்கும், அஸ்வினுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு யுவேந்திர சாஹலுக்கு அதிக அளவு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவது அவரின் பந்துவீச்சுக்கு கிடைத்த மரியாதையாகும்.



மகி, தோனி, மகேந்திர சிங் தோனி, அல்லது அண்ணா, எப்படி வேண்டுமோ அப்படிக் கூப்பிடுங்க, ஆனால், தயவு செய்து சார் என்று மட்டும் கூப்பிடாதே என்று கேட்டார். இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரிப்பதைப் பார்த்து தோனியும் சிரித்தார். அதுமுதல் தோனியை நான் மகிபாய், (மகி அண்ணா) என்றே அழைக்கிறேன்.
இவ்வாறு சாஹல் தெரிவித்தார்.