‘‘சென்னையை மிஸ்பண்ணாதீங்க தோனி’’ - புனே ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் 1

‘‘சென்னையை மிஸ்பண்ணாதீங்க தோனி’’ – புனே ரசிகர்கள் அன்பு வேண்டுகோள்

சென்னையை மீஸ் பண்ணாதீங்க தோனி என்று புனே ரசிகர்கள் வெளியிட்ட  புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

‘‘சென்னையை மிஸ்பண்ணாதீங்க தோனி’’ - புனே ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் 2
Kerala Cricket Association secretary Jayesh George, however, revealed that he spoke to CSK CEO and BCCI officials regarding the issue.

2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.‘‘சென்னையை மிஸ்பண்ணாதீங்க தோனி’’ - புனே ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் 3

இந்த நிலையில் பஞ்சாப் உடனான போட்டிக்கு பிறகு புனேவுக்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவை அளித்துள்ளனர்.

விமான நிலையம் முதல் வீரர்கள் தங்கும் ஓட்டல்கள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீர்ர்களை பின் தொடர்ந்து உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர் புனே ரசிகர்கள்.

மேலும் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில், “சென்னையை மிஸ் பண்ணாதீங்க தோனி… சின்ன தல ரெய்னா…” என்று எழுதப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இப்புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவிட்டுள்ளது.

மேலும் புனே ரசிகர்கள் பலரும் சென்னையில் விளையாடினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த அளவு ஆதரவும் இருக்குமோ அத்தகைய ஆதாரவை புனே ரசிகர்களும் வழங்குவோம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *