இதுக்கு மேலயும் இது வேண்டாம், நிறுத்திக்கலாம்! ஐபிஎல் தொடரில் நிறவெறித்தாக்குதல் குறித்து சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பிராவோ 1

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி, தனக்கு ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட நிறவெறித் தாக்குதல் குறித்து மனமுடைந்து கொதிப்புடன் பேசியுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் சமியும், இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான திசாரா பெரேராவும் விளையாடியபோது, அவர்களுக்கு எதிராக நிறவெறியை வெளிப்படுத்தும் வகையில் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது ‘காலு’ என சொல்லப்பட்ட வார்த்தைக்கு ‘பலமான கருப்பன்’ என்றுதான் அர்த்தம் என்று நினைத்ததாகவும், இபோபதுதான் அதன் உண்மை பொருள் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார் சமி. ஐதராபாத் அணியில் தன்னுடன் விளையாடிய சக வீரர்கள் அவ்வாறு நடந்து கொண்டது குறித்து மிகவும் வருத்தத்துடன் வீடியோ பகிர்ந்துள்ளார் சமி.இதுக்கு மேலயும் இது வேண்டாம், நிறுத்திக்கலாம்! ஐபிஎல் தொடரில் நிறவெறித்தாக்குதல் குறித்து சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பிராவோ 2

இப்படி சமி, தன் அனுபவத்தைப் பகிர்ந்ததிலிருந்து கிரிக்கெட் உலகில் ஏற்படும் நிறவெறித் தாக்குதல் குறித்துப் பலரும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். இது குறித்து வெஸ்ட் இண்டீஸின் ஆல்-ரவுண்டரான டிவைன் பிராவோவும் தன் கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர், “உலகளவில் நடத்தப்படும் நிறவெறித் தாக்குதல்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. ஒரு கறுப்பின மனிதனாக, உலக வரலாற்றில் கறுப்பினத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனாலும் எப்போதும் நாங்கள் பழிவாங்க வேண்டும் என்று கேட்கவில்லை. இதுக்கு மேலயும் இது வேண்டாம், நிறுத்திக்கலாம்! ஐபிஎல் தொடரில் நிறவெறித்தாக்குதல் குறித்து சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பிராவோ 3எப்போதும் மரியாதைக்கும் சம உரிமைக்குமே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மற்றவ்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம். ஆனால் எங்கள் மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்று மனமுடைந்து பகிர்ந்து கொண்டார்.

அவர் மேலும், “எனது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். நாங்களும் பலம் வாய்ந்தவர்களாகவும் அழாகானவர்களாகவும் இருக்கிறோம். உலகளவிலும் மாபெரும் மனிதர்களைப் பாருங்கள். நெல்சன் மண்டேலா, முகமது அலி, மைக்கெல் ஜோர்டன் உள்ளிட்டவர்கள் எங்களின் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.இதுக்கு மேலயும் இது வேண்டாம், நிறுத்திக்கலாம்! ஐபிஎல் தொடரில் நிறவெறித்தாக்குதல் குறித்து சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பிராவோ 4

இதுவரை நடந்தது போதும். எங்களுக்கு சம உரிமை வேண்டும். எங்களுக்கு பழிக்குப் பழி வேண்டாம். போர் வேண்டாம். எங்களுக்கு மரியாதைதான் வேண்டும். ஒரு மனிதர் எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ, அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்த வேண்டும். அதுதான் மிக முக்கியமானது,” என்று விரிவாக பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமி, “ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸுக்காக விளையாடும்போது என்னை ‘காலு’ என்று கோஷம் எழுப்பி அழைப்பார்கள். என்னையும் பெரேராவையும் அப்படி கூப்பிடுவார்கள். இதற்கு அர்த்தம் பலமானவன் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அதன் அர்த்தம் புரிந்துள்ளது. எனக்கு கோபம் வருகிறது,” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

 

 

அமெரிக்காவில், ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாயிட், போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். ஜார்ஜின் கழுத்தில், கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் முட்டிப்போட்டு துன்புறுத்திய போலீஸ் அதிகாரி மற்றும் அவருடன் இருந்த மற்ற மூன்று காவலர்கள் தற்போது காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜின் கழுத்து மீது முட்டிப்போட்டு துன்புறுத்திய காவலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஜார்ஜின் மறைவைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.இதுக்கு மேலயும் இது வேண்டாம், நிறுத்திக்கலாம்! ஐபிஎல் தொடரில் நிறவெறித்தாக்குதல் குறித்து சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பிராவோ 5

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார் சமி. சில நாட்களுக்கு முன்னர் அவர், “சர்வதேச கிரிக்கெட் கமிட்டியான ஐசிசி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் என்னைப் போன்ற மனிதர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதில்லை? எங்களைப் போன்றவர்களுக்கு எதிராக நடக்கும் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதில்லையா? அமெரிக்காவைப் பொறுத்தது மட்டுமல்ல இது. தினம் தினம் நடந்து வரும் சம்பவம் இது. அமைதியாக இருக்க வேண்டிய நேரமல்ல இது. நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *