இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்திய அணி படைத்த சாதனைகளின் பட்டியல்!! 1
3rd July 2018, Emirates Old Trafford, Manchester, England; International Twenty20 cricket, England versus India; KL Rahul of India celebrates as he reaches his century and guides India to victory (photo by Alan Martin/Action Plus via Getty Images)

இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்திய அணி படைத்த சாதனைகளின் பட்டியல்!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் துவக்கத்தில், இந்திய அணி 3- இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து இந்திய அணி படைத்த சாதனைகளின் பட்டியல்!! 2

நேற்று மற்றும் இந்திய அணி சார்பில் 6 சாதனைகள் படைக்கப்பட்டது :

1.2016க்கு பிறகு கே.எல் ராகுல் அடித்த முதல் சதம் இதுவாகும். அதன்பின்னர் 35 ஆட்டங்களில் 14 அரை சதம் அடித்துள்ளார் ராகுல். இதில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மற்றும் ஒரு சதம் கூட அடிக்காமல் தொடர்ந்து ஆறு அரை சதங்கள் அடித்துள்ளார்.

2.நேற்று சதம் அடித்த ராகுலின் டி20 சராசரி 55.91 ஆகும். இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் தற்போது அதிக சராசரி ஆகும்.

3.ரோகித் சர்மாவிற்கு பிறகு டி20 போட்டிகளில் இரண்டு சதம் அடித்த வீரர் ராகுல். இதற்கு முன்னர் அமெரிக்காவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக ஒரு சதம் அடித்திருந்தார்.

4.இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். டி-20 போட்டிகளில்  இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். அதேவேளையில், விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, 56 போட்டிகளில்  இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக  மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

5.நேற்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 7 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ந்து 7 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி இந்திய அணியாகும்.

6.ஒரே போட்டியில் சதம் (ராகுல்)அடித்து 5 (குல்தீப்) விக்கெட் வீழ்த்திய இரண்டாவது அணி இந்திய அணியாகும். இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் மோர்ன் வேன் விக் சதம் அடிக்க அந்த அணியின் டேவிட் வைஸ் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *