இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன் 1

இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி ஓடுவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடு விளைவிப்பதாக அமையும் என பீட்டர்சன் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன்
2015-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறியது. அடுத்த உலகக் கோப்பை தொடர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன் 2

இதனால் உலகக் கோப்பை தொடருக்குப் பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருநாள் அணியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் செய்தது.

அதன்படி மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சியடைந்தது. இதனால் விளைவாக தற்போது ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளது.இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன் 3

அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடரை 0-4 என இழந்தது. சமீபத்தில் சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் ஒருநாள் போட்டியை நோக்கி இங்கிலாந்து செல்வது, டெஸ்ட் போட்டிற்கு கேடு விளைவிக்கும் என முன்னாள் நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன் 4
MELBOURNE, AUSTRALIA – DECEMBER 24: Coach Trevor Bayliss (R) and Joe Root talk during an England nets session at the Melbourne Cricket Ground on December 24, 2017 in Melbourne, Australia. (Photo by Michael Dodge/Getty Images)

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘எந்த திசையில் இங்கிலாந்து அணி செல்ல விரும்புகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் (இங்கிலாந்து அணி) டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண் மற்றும் வெளியே ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளோம். சில வருடத்திற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளோம்.

ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இதுவரை வென்றது கிடையாது. சில வருடத்திற்கு முன்பே உலகக் கோப்பை குறித்த தகவல் வெளியானது. அதில் இருந்து இங்கிலாந்து அணி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து உலகக் கோப்பையை நோக்கி செல்வது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேடு- பீட்டர்சன் 5இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேடா முடியும். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய எங்களை போன்ற வீரர்களுக்கு இது கவலையும், விரக்தியும் அளிக்கிளது’’ என்றார்.

கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதத்துடன் 8000-த்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். சராசரி 47.28 ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *