இந்தியா ‘ஏ’ அணியை 253 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் 1
Sam Curran, Surrey
இந்தியா ‘ஏ’ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 16-ந்தேதி வொர்செஸ்டரில் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இந்தியா ‘ஏ’ அணியை 253 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ் 2

ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் முகது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *