ஸ்மித் இல்லாதா ஆஸி!! ஆர்ச்சருடன் இங்கிலாந்து! வெல்லப்போவது யார்? 1

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஸ்மித் இல்லாத நிலையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியை, ஆர்ச்சர் மிரட்டுவார் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி யின் இரண்டு இன்னிங்ஸிலும் ஸ்மித் சதம் அடித்தார். 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஸ்மித் இல்லாதா ஆஸி!! ஆர்ச்சருடன் இங்கிலாந்து! வெல்லப்போவது யார்? 2

 

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. 2-வது டெஸ்டில், ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் காயமடைந்த ஸ்மித், இந்தப் போட்டியில் ஆடாதது அந்த அணிக்கு பின்னடைவு என்று கூறப்படுகிறது. அந்த அணி, வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனை அழைத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டியிலும் ஆடவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் தன் பவுன்சரால் ஆஸ்திரேலிய அணியை மிரட்டி வருகிறார். இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகி யோர் பார்மில் உள்ளனர். கேப்டன் ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள் இந்த போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்து வார்கள் என்று நம்பலாம்.

 

ஸ்மித் இல்லாதா ஆஸி!! ஆர்ச்சருடன் இங்கிலாந்து! வெல்லப்போவது யார்? 3

இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிக்காகப் போராடும் என்பதால்,  விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

 இந்த போட்டியில் ஸ்மித் இடத்தில் மார்னஸ் லபுஷான் களமிறக்கப்படக்கூடும். ஏனெனில் அவர்தான், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித்துக்கு பதிலி வீரராக களமிறங்கியிருந்தார். ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸர் லபுஷானையும் பதம் பார்த்தது. எனினும் தாக்குப்பிடித்து விளையாடி அரை சதம் அடித்து போட்டியை டிராவில் முடிக்க உதவி செய்திருந்தார்.

அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்கள் கைப்பற்றிய ஜோப்ரா ஆர்ச்சர் தனது பவுன்ஸர்களால் ஆஸ்திரேலிய அணியை இந்த டெஸ்ட் போட்டியிலும் சோதிக்கக்கூடும். ஸ்டூவர்ட் பிராடும் தனது சீரான வேகத்தால் மிரட்ட காத்திருக்கிறார்.

நேரம்: பிற்பகல் 3
இடம்: ஹெட்டிங்லி
நேரலை: சோனி சிக்ஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *