கரோனா வைரஸ் எதிரொளி: மேலும் ஒரு சர்வதேச தொடரை தள்ளி வைத்தது கிரிக்கெட் வாரியம்! 1

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணியை உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில் கொரோனா வைரஸின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக சொந்த நாடு திரும்ப வீரர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் எதிரொளி: மேலும் ஒரு சர்வதேச தொடரை தள்ளி வைத்தது கிரிக்கெட் வாரியம்! 2
JOHANNESBURG, SOUTH AFRICA – JANUARY 27: England captain Joe Root with the series trophy after Day Four of the Fourth Test between South Africa and England at Wanderers on January 27, 2020 in Johannesburg, South Africa. (Photo by Stu Forster/Getty Images)

ஆகவே, இன்றைய ஆட்டத்தை உடினடியாக ரத்து செய்துவிட்டு சொந்த நாடு திரும்ப இருக்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானா எதிரொலி உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்ட இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பிந்தைய தேதிகளில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.கரோனா வைரஸ் எதிரொளி: மேலும் ஒரு சர்வதேச தொடரை தள்ளி வைத்தது கிரிக்கெட் வாரியம்! 3

கரோனா வைரஸ் எதிரொளி: மேலும் ஒரு சர்வதேச தொடரை தள்ளி வைத்தது கிரிக்கெட் வாரியம்! 4
England player Jos Butler has been fined 15 per cent of his match fee for breaching Level 1 of the ICC Code of Conduct during the fifth day of the second Test against South Africa in Cape Town.

இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. வரும் 15-ஆம் தேதி லக்னோவிலும், 18-ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்த 2 மற்றும் 3-வது போட்டிகளும் கொரானா பீதி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தப் போட்டித் தொடர் மறு அட்டவணைப்படுத்தப்பட இருப்பதாகவும், பின்னர் அறிவிக்கப்படவுள்ள தேதிகளில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *