வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம், 5ஆவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி!! 1
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், 5-வது ஒருநாள் போட்டி சவித்ஆம்ப்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் கெயிலும், கைல் ஹோப்பும் களமிறங்கினர். கெயில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம், 5ஆவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி!! 2
West Indies players celebrate a wicket against Sri Lanka during the One Day cricket match between the two teams at Harare Sports Club in Harare, Wednesday, Nov, 16, 2016. The two teams are playing in a triangular series featuring Zimbabwe.(AP Photo/Tsvangirayi Mukwazhi)
அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். கைல் ஜோப் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஷாய் ஹோப்யுடன், மார்லன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்து ரன்குவிக்க முயற்சித்தார்.
சாமுவேல்ஸ் 32 ரன்னிலும் , அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் முகமது 25 ரன்களுலும் ஆட்டமிழந்தனர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, 39.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 72 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.
சுனில் அம்ப்ரிஸ் 38 ரன்களுடனும், அஷ்லே நர்ஸ் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம், 5ஆவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி!! 3
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ராய் 96 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து தொடக்க நல்ல தொடக்கத்தை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் அடித்தார். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதிசெய்தது.
வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம், 5ஆவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி!! 4
இங்கிலாந்து அணி 38 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் மோயின் அலி தொடர்நாயகன் விருது பெற்றார். இந்த ஒருநாள் தொடரை 4-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *