அனுபவம் இல்லாத அணியாக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடந்தது இதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
துவக்க வீரர்களாக பின்ச் மற்றும் ஹெட் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஹெட் வில்லி பந்தில் அவுட் ஆக, ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல துவக்கமாக அமையவில்லை. பின்பு வந்த மார்ஸ் பின்ச் உடன் இணைந்து நிதானமாக ஆடினார். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஒருகட்டத்தில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
மேக்ஸ்வெல் மற்றும் அகர் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல ஸ்கோரை அடைய செய்தனர். மேக்ஸ்வெல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு 40 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியாக 47 ஒவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் சேர்த்தது.
அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும் ரூட் மற்றும் மார்கனின் நிலையான ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை எட்டியது. கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆட்டம் ஆஸ்திரலியா பக்கம் சாய தொடங்கியது.
பின்பு, இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இழுபரியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியில் மார்கன் 69 ரன்களும், ரூட் 50 ரன்களும் எடுத்தனர். ஸ்டான்லேக், நேசேர், டை மூவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆட்டநாயகன் விருதை மோயின் அலி தட்டி சென்றார்.