ஜாம்வான்கள் வரிசையில் இணைய, லார்ட்சில் கோலிக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு!! 1

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றின.

5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) தொடங்குகிறது.

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ், டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஜாம்வான்கள் வரிசையில் இணைய, லார்ட்சில் கோலிக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு!! 2

 

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றி கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டேவிட் கோவா தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது.

அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்த மைதானத்தில் வெற்றி கிடைத்தது. அந்த அணி 95 ரன் வித்தியாசத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 17 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

ஜாம்வான்கள் வரிசையில் இணைய, லார்ட்சில் கோலிக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு!! 3
India captain Virat Kohli during the nets session at Lord’s, London. (Photo by Tim Goode/PA Images via Getty Images)

1932-ம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி தனது டெஸ்டை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியது. 11-வது டெஸ்டில் விளையாடிய போது தான் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி கிடைத்தது. அதன்பிறகு டோனி அந்த பெருமையை பெற்றார்.

இவர்கள் வரிசையில் இணையும் ஆர்வத்தில் விராட்கோலி இருக்கிறார்.

இதுவரை இந்தியா லார்ட்சில் விளையாடிய போட்டிகள்:

 • 1936: தோல்வி விஜயநகரத்தின் மகாராஜாவுடன் கேப்டனாக ஒன்பது விக்கெட்டுகள் வித்யாசத்தில் இழந்தனர்
 • 1946: தோல்வி பத்து விக்கெட்டுகளை இழந்தவர், பட்டாடியின் நவாப் கேப்டனாக
 • 1952: தோல்வி விஜய் ஹசாரே கேப்டனாக எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.
 • 1959: தோல்வி எட்டு விக்கெட் இழப்பு, பங்கஜ் ராய் கேப்டன் என்ற நிலையில்.
 • 1967: தோல்வி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 124 ரன்கள் வித்தியாசத்தில், எம்.கே. பட்டோடியிடம் கேப்டனாக இருந்தார்.
 • 1971: டிரா, கேப்டனாக அஜித் வதேகருடன்.
 • 1974: தோல்வி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் அஜித் வாகேக்கரை கேப்டனாக தோற்கடித்தார்.
 • 1979: தோல்வி ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன் கேப்டனாக டிரா ஆனார்.
 • 1982: தோல்வி சுனில் கவாஸ்கருடன் கேப்டனாக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
 • 1986: வெற்றி ஐந்து விக்கெட்டுகளால் வென்றது, கேப்டன் கபில்தேவுடன்.
 • 1990: தோல்வி 247 ரன்கள் வித்தியாசத்தில் முகமது அசாருதீன் கேப்டனாக வீழ்ந்தார்.
 • 1996: டிரா, முகமது அசாருதீன் கேப்டன் என்ற நிலையில்.
 • 2002:தோல்வி 170 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, கேப்டனாக சவுரவ் கங்குலியுடன்.
 • 2007: டிரா, ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார்.
 • 2011:தோல்வி 196 ரன்கள் மூலம் தோற்றது, கேப்டன் எம்.எஸ் தோனி உடன்.
 • 2014: வெற்றி 95 ரன்கள் மூலம் வெற்றி, கேப்டன் எம் டோனி.

Leave a comment

Your email address will not be published.