டி.20 உலகக்கோப்பை 2022; ஆபத்தான அயர்லாந்து அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20வது போட்டியில் அயர்லாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கான அயர்லாந்து அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. சிமி சிங்கிற்கு பதிலாக பின் ஹாண்ட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
அயர்லாந்து அணி;
பவுல் ஸ்டிர்லிங், ஆண்ட்ரியூ பல்பிர்னே, லோர்கன் டக்கர், ஹாரி டக்கர், கர்டிஸ் சாம்பர், ஜார்ஜ் டக்ரெல், கிரேத் டினேலி, மார்க் அடைர், ஃபின் ஹாண்ட் பாரி மெக்ராத், லிட்டில்.
இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;
ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொய்ன் அலி, சாம் கர்ரான், கிரிஸ் வோக்ஸ், அடில் ரசீத், மார்க் வுட்.