இங்கிலாந்து அபாரம், 2-1 என தொடரை கைப்பற்றியது

இங்கிலாந்து அபாரம், 2-1 என தொடரை கைப்பற்றியது

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.

ரோச் 5 விக்கெட்டும், ஹோல்டர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் மூன்றாவது நாளான இன்று 177 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 62 ரன்னும், பாவெல் 45 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் 106 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

இதனையடுத்து இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 107 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதனை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 107/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் முழு ஆதிக்கத்துடன் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன், மே.இ.தீவுகள் அணியின் சிறந்த பேட்ஸ்மெனான ஷேய் ஹோப் (62) விக்கெட்டை உணவு இடைவேளக்குப் பின் கைப்பற்றி அதே ஓவரில் தேவேந்திர பிஷூவை பவுல்டு செய்தார்.

பிறகு கிமார் ரோச்சையும் பவுல்டு செய்து 2008-ல் டிரெண்ட் பிரிட்ஜில் நியூஸிலாந்துக்கு எதிராக 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய தன் சொந்த சாதனையை முறியடித்தார்.

நேற்று காலை பெவிலியன் முனையிலிருந்து பந்து வீச்சைத் தொடங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், முதல் ஒருமணி நேரத்தில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ராஸ்டன் சேஸ் தனது 2-ம் நாள் ஆட்ட ஸ்கோரை மாற்ற முடியவில்லை, ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை ஜானி பேர்ஸ்டோவுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அபாய வீரர் ஜெர்மைன் பிளாக்வுட் 2 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் அவரது தூக்கி அடிக்கப்பட்ட ஷாட்டை மிட் ஆஃபில் பிராட் தவற விட்டார்.

ஆனால் இதே பிராட் ஒரு அருமையான இன்ஸ்விங்கரில் பிளாக்வுட் பின்னங்காலைத் தாக்க கள நடுவர் இராஸ்மஸ் அவுட் தீர்ப்பை 3-வது நடுவர் இல்லை என்றார்.

இது எப்படி நாட் அவுட் ஆனது என்று கடைசி வரை விளங்கவில்லை. இந்த 2 வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத பிளாக்வுட் ஆண்டர்சன் வீசிய லெக் கட்டருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷேய் ஹோப் மே.இ.தீவுகளின் பெரிய ‘ஹோப்’ ஆகத் திகழ ஆண்டர்சன், பிராட் இருவருமே பயங்கரமாக வீசிய போதிலும் ஹோப் சரியான உத்தியுடன், பின்னங்காலில் சென்ற் அற்புதமான ஒரு டெஸ்ட் வீரர் என்பதை நிரூபித்தார்.

முதல் ஒருமணி நேரத்தில் 19 ரன்களைச் சேர்த்த பிறகு ஜோ ரூட் இருமுனைகளிலும் பந்து வீச்சை மாற்றினார், பென் ஸ்டோக்ஸ், ரோலாண்ட்-ஜோன்ஸ் ஆகியோர் வந்தனர்.

டவ்ரிச் 14 வேதனையான ரன்களுடன் ஆடி வந்த போது ரோலண்ட் ஜோன்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை மிட் ஆனில் பிராடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜேசன் ஹோல்டருக்கு அலிஸ்டர் குக் கல்லியில் கேட்சை விட்டார். இந்தத் தொடரில் குக் விட்ட கேட்சைக் கணக்கெடுக்க ஒரு டீம் தேவைபடும் நிலை உள்ளது.

இந்தத் தொடரில் மொத்தமாக விடப்பட்ட 26-வது கேட்ச் ஆகும் இது.

ஷேய் ஹோப் 62 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் அவுட் ஆக ஒரு நல்ல முன்னிலை பெற்று இங்கிலாந்தை ஏதாவது சிக்கலுக்குள்ளாக்கும் முயற்சி வீணானது. 65.1 ஓவரில் மே.இ.தீவுகள் அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 107 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் குக் 17 ரன்களில் பிஷூவிடம் எல்.பி.ஆனார்.

பிறகு ஸ்டோன்மேன் 40 ரன்களையும் வெஸ்ட்லி 44 ரன்களையும் எடுக்க 28 ஓவர்களில் 107/1 என்று இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷேய் ஹோப் தேர்வு செய்யப்பட்டனர்.

Editor:

This website uses cookies.