இங்கிலாந்து வீரர்கள் பாதி ஐபிஎல் தொடரில்தான் ஆடுவார்கள்!! 1

ஐபிஎல் தொடர் துவங்கியபின் இங்கிலாந்தின் பெரும்பாலான வீரர்கள் பாதியிலேயே நாடு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடும் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ மற்றும் சோப்ரா ஆச்சர் ஆகியோர் உலக கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரின் பாதியிலேயே இங்கிலாந்து திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஜாப்ரா ஆர்சரை எப்படியாவது இங்கிலாந்து அணியில் சேர்த்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.இங்கிலாந்து வீரர்கள் பாதி ஐபிஎல் தொடரில்தான் ஆடுவார்கள்!! 2

இன்னும் சில வாரங்கள் சென்றால் ஜாப்ரா ஆர்சர் இங்கிலாந்து நாட்டு தேசிய அணியில் விளையாட தகுதி பெற்றுவிடுவார். இந்நிலையில் ஜாப்ரா ஆர்சர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வில், ஐபிஎல் தொடர் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘’ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு, உலகக் கோப்பைக்கான அணி தேர்வில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்று தெரிவித்தார்.இங்கிலாந்து வீரர்கள் பாதி ஐபிஎல் தொடரில்தான் ஆடுவார்கள்!! 3இங்கிலாந்து வீரர்கள் பாதி ஐபிஎல் தொடரில்தான் ஆடுவார்கள்!! 2

அவர் மேலும் கூறும்போது, ‘’உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறோம். இந்த தொடருக்கு முன் பாகவே உலக கோப்பை போட்டிக்கு எந்த மாதிரியான அணி தேவை என்பதை முடிவு செய்திருக்க வேண்டும். வீரர்களின் ஐ.பி.எல். செயல்பாட் டி ன்படி உலக கோப்பை அணியில் மாற்றம் இருக்கும் என்று நினைக்கவில்லை. சரியான கலவையில் அணி அமைவது முக்கியம். குறிப்பாக பேட்டிங் வரிசையில் யார், யார் இடம் பெற்றால் நேர்த்தியாக இருக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பந்துவீச்சில் பெரிய மாற்றங்களை எதிர்நோக்கவில்லை.

’தொடர்ந்து பரிசோதனை முயற்சி செய்து கொண்டிருந்தால் போட்டிகளை வெல்வது முக்கியமில்லையா?’ என்று கேட்கிறீர்கள். வெல்வதற் காகத்தான் ஆடுகிறோம். இல்லை என்றால் பந்து ஸ்டம்பை தாக்கட்டும் என்று விட்டுவிடுவோமே. இவற்றை எதிர்மறையாக பார்த்தால், அவற்றில் இருந்து எதிர்மறை விஷயங்கள் மட்டுமே தென்படும். நேர்மறையாக நோக்கினால் தான் நல்ல விஷயங்களை எடுக்க முடியும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *