யர்லாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வலிமையான நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணியில், இந்திய பந்து வீச்சாளர்களுக்குத் தலைவலியாக இருக்கப் போகும் 5 பேட்ஸ்மென்களை குறித்து பார்ப்போம்.
1.ஜோஸ் பட்லர்
கெவின் பீட்டர்சன் ஓய்வு பெற்ற பிறகு இங்கிலாந்து அணியின் டி 20 சூப்பர் ஸ்டார் ஜோஸ் பட்லர்தான் என்பதில் சந்தேகமில்லை. இவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 30 பந்துகளுக்கு 61 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பட்லருக்கு இந்திய அணியின் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பது நன்கு தெரியும். ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்ததில் இவரின் பங்கு பெரியதாகும். ஃப்ரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட் ஆகிய இரு நிலைகளிலும் நன்றாக ஆடும் பட்லர் இந்திய பந்து வீச்சாளர்களுக்குக் கண்டிப்பாக பெரிய தலைவலிதான்.