2.ஜானி பேர்ஸ்டோ
பட்லர் டீமில் இருந்ததால் விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோவுக்கு அணியில் இடம் பிடிப்பது கடினமாக இருந்த நிலையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய இடத்தை உறுதி செய்தவர் பேர்ஸ்டோ. இங்கிலாந்து பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாகத் திகழும் பேர்ஸ்டோ எதிர்பாராத தருணங்களில் எதிர்பாரா ஷாட்டுகளை அடிப்பவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோ நல்ல டிஃபென்ஸ் பிளேயர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.