3.அலெக்ஸ் ஹேல்ஸ்
இங்கிலாந்து அணி, தான் விளையாடும் ஆட்டங்களில், எப்போதும் முதலில் தற்காத்து கொண்டு பின்பு தாக்கும் பாணியை கொண்ட அணியாக இருந்தது. பின்பு முழுக்க தாக்குதல் நடத்தும் அணியாக தன் ஆட்டத்தின் பாணியை மாற்றியது. அந்த மாற்றத்தின் போது முதல் வேலையாக, டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துகொண்டிருந்த அலெக்ஸ் ஹேலை அணிக்குள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரரான ஹேல்ஸ் நம் சேவாக்கை போல் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பந்து வீச்சாளர்களை திணறடிக்கக்கூடியவர். அவரது விக்கெட்டை முதலில் கைப்பற்றுவது இந்திய அணிக்கு முக்கியமாகும்.