விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கூட, அவர் ரோகித் அளவு அதிரடியாக விளையாடி தான் பார்த்ததில்லை என ரோகித் ஷர்மாவை வீரேந்தர் சேவாக் புகழ்ந்துள்ளார்.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் பந்துவீச்சை அவர் வானத்தில் பறக்கவிட்டார்.

43 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 85 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இவரது அதிரடியால் இந்திய அணி எளிமையான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டி ரோகித் ஷர்மாவின் 100-வது டி20 போட்டியாகும். அத்துடன் நேற்று அவர் கேப்டனாக விளையாடி இருந்தார்.

கோலி, ரோஹித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்: ஓப்பனாக பேசிய சேவாக் 1
Rohit Sharma (Captain) of India celebrates his fifty with Shikhar Dhawan of India during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், “ஒரே ஓவரில் 3-4 சிக்ஸர்கள் அடிப்பதும், 45 பந்துகளில் 80-90 ரன்கள் விளாசுவதும் ஒரு கலை. விராட் கோலி கேப்டனாக விளையாடியபோது, அவரிடம் கூட ரோகிஷ் காட்டிய அதிரடி போன்று ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 43 பந்தில் 85 ரன்கள் விளாசினார்.

அவரது ஸ்கோரில் ஆறு சிக்சர்கள் அடங்கும். மொசாடெக் ஹொசைன் பந்தில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தார். மூன்று சிக்சர்கள் அடித்தபோது மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார்.கோலி, ரோஹித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்: ஓப்பனாக பேசிய சேவாக் 2

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்தபோது, மேலும் மூன்று சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்தேன். நான்காவது பந்தை நான் மிஸ் செய்யும்போது, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆஃப்-ஸ்பின்னர் பந்து வீசும்போது பந்து மிகப்பெரிய அளவில் திரும்பாது என்பது எனக்குத் தெரியும். அதனால் பந்து வரும்வரை க்ரீஸ் பகுதியில் நின்று பந்து விளாச முயற்சி செய்தேன்’’ என்றார். • SHARE
 • விவரம் காண

  ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு !!

  ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு ஐபிஎல் போட்டி குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கண்டிப்பாக நடைபெறும்...

  இந்த இரண்டு பேர் தான் உலகின் தலை சிறந்த துவக்க வீரர்கள்; டாம் மூடி பாராட்டு !!

  இந்த இரண்டு பேர் தான் உலகின் தலை சிறந்த துவக்க வீரர்கள்; டாம் மூடி பாராட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க...

  அந்த முக்கியமான முடிவை நான் தான் எடுத்தேன்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் !!

  அந்த முக்கியமான முடிவை நான் தான் எடுத்தேன்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி ஆட்டமிழந்ததும் யுவராஜை இறக்காமல்...

  தோனியை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெஹ்ரா; காரணம் என்ன தெரியுமா..?

  தோனியை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெஹ்ரா; காரணம் என்ன தெரியுமா..? 15 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்ச்சை விட்டதற்காக அப்போதைய...

  ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

  ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் கொரோனா பீதியால் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐபிஎல் கண்டிப்பாக...