இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிளான ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4ஆவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கென்னிங்கடன் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து டாஸ் வென்று வெஸ்ட் இண்டீசை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க ஆட்டாகராரன எவின் லெவிஸ் இங்கிலாந்து பந்து வீச்சை துவசம் செய்தார்.
அவர் 130 பந்துகளில் 176 ரன் குவித்தார். இதில் 17 ஃபோர்களும் 7 சிக்சர்களும் அடங்கும். பின்னர் அவரால் ஆடுகள்த்தில் நிறக முடியாத நிலை ஏற்ப்பட்டவுடன் அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். இந்த ஆட்டம் அவருக்கு கண்டிப்பாக 200 அடித்து தரும் ஆட்டம். ஆனால் னழுவ விட்டு விட்டார்.
சர்வேதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் 100க்கும் மேல் ரன் அடித்து பின்னர் ரிட்டயர்டு ஹர்ட் ஆன வீரர்கள் பட்டியள் கீழே :
- 176* – எவின் லெவிஸ் – இங்கிலாந்திற்க்கு எதிராக 2017
- 163* சச்சின் டெண்டுல்கர் – நியூசிலாந்திற்கு எதிராக 2009
- 133* டு ப்லெஸ்சிஸ் – இந்தியாவிற்கு எதிராக 2015
இந்த ருதர தாண்டவம் ஆடிய எவின் லெவிசுக்கு 26 வயது தான் ஆகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட்கிழமை பிரிஸ்டோனில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை போலீசார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அதன்பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை வெளியே விட்டுள்ளனர். அவருடன் மற்றொரு வீரர் ஹேல்ஸும் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேக்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.