தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்கள் தான் என தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டுப்லெசி வேதனை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது.
50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 228 என் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.
இவர் 128 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதத்தை பூர்த்தி செய்தார். வெற்றியை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதியில் 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து. தென் ஆப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ரோகித் 122 ரன்களுடனும், பாண்டியா 15 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் மற்றும் பெலக்வாயோ தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
சஹல் 4 விக்கெட்
நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சஹல் அபாரமாக பந்துவீசி 51 ரன்களை விட்டுத் தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2-44, ஜஸ்ப்ரீத் பும்ரா 2-35, குல்தீப் 1-46 விக்கெட்டை சாய்த்தனர்.

பவுலர்களால் நிமிர்ந்த தென்னாப்பிரிக்கா: ஒரு கட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணி பெலுக்வயோ 34, கிறிஸ் மோரிஸ் 42, ரபாடா 31 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது. கடைசி 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 66 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டம்
மே.இ.தீவுகள்-ஆஸ்திரேலியா,
இடம்: நாட்டிங்ஹாம்,
நேரம்: மதியம் 3.00.
ஸ்கோர் போர்டு
தென்னாப்பிரிக்கா ரன்கள் பந்துகள்
ஹஷிம் ஆம்லா 6 9
குவின்டன் டி காக் 10 17
டூ பிளெஸ்ஸிஸ் 38 54
வான்டேர்டுஸன் 22 37
டேவிட் மில்லர் 31 40
டுமினி 3 11
பெலுக்வயோ 34 61
கிறிஸ் மோரிஸ் 42 34
ககிúஸா ரபாடா 31 35
இம்ரான் தாஹிர் 0 2
50 ஓவர்களில் 227/9
பந்துவீச்சு ஓவர்கள் மெய்டன் ரன்கள் விக்கெட்
புவனேஸ்வர் குமார் 10 0 44 2
ஜஸ்ப்ரீத் பும்ரா 10 1 35 2
ஹார்திக் பாண்டியா 6 0 31 0
குல்தீப் யாதவ் 10 0 46 1
சஹல் 10 0 51 4
கேதர் ஜாதவ் 4 0 16 0