எதிரணி பந்து வீச்சை சேவாக் போல் அச்சுறுத்தும் திறமை: ஃபகார் ஜமான் குறித்து வாசிம் அக்ரம் 1

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்தியாவை புரட்டி எடுத்து சதம் கண்ட பகார் ஜமான் இடம்பெற்றிருப்பது பற்றி முன்னாள் பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனம் வாசிம் அக்ரம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடாத பகார் ஜமான், தேர்வுக்குழு தலைவர் இன்ஜமாம் உல் ஹக்கின் உறவினர் இமாம் உல் ஹக், உஸ்மான் சலாஹுதீன், சாத் அலி, ஆல் ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் ஆகிய புதுமுக வீரர்களும் டெஸ்ட் போட்டி அணியில் பாகிஸ்தானின் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளனர்.fakhar zaman க்கான பட முடிவு

“டெஸ்ட் போட்டிகளில் ஃபகார் ஜமானை சேர்த்திருப்பது ஒரு மிகச்சிறந்த காய்நகர்த்தல். எதிரணியினரிடத்தில் சேவாக், வார்னர் போல் இவர் பயத்தை ஏற்படுத்த முடியும். இங்கிலாந்தின் டியூக் பந்துகள் பவுலர்களுக்குச் சாதகமாக இருக்கும்.

வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் சூப்பர் லீகில் நன்றாக வீசினார், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் வேறு. விக்கெட்டுகள் எடுத்தாலும் ரன்கள் அதிகம் கசியவிட்டார். அவர் சீரான முறையில் வீசுவதில்லை.fakhar zaman க்கான பட முடிவு

தற்போது ரஹத் அலி அற்புதமாக வீசி வருகிறார், அவர் வேகத்துடன் ஸ்விங்கும் செய்கிறார், இங்கிலாந்துக்கு அவர் சரியான தேர்வுதான்” என்றார் அக்ரம்.

மே மாதத்தில் அயர்லாந்து  தன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுகிறது. பிறகு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகள் ஆடுகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *