மைதானத்தில் தனி நாடு கோஷம்: இந்திய ரசிகர்கள் கைது! 1

இந்தியா –  நியூசிலாந்து போட்டியின் போது சீக்கியர்களுக்கு தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதலில் தகுதி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று களம் கண்டன. 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் தெரிவித்தனர்.

 

நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் 4 பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்தில் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மைதானத்தில் தனி நாடு கோஷம்: இந்திய ரசிகர்கள் கைது! 2

இது குறித்து பேசிய காவலர் ஒருவர், இந்தியா –  நியூசிலாந்து போட்டியின் போது சீக்கிய மதத்தைச் சேர்ந்த 4 பேர் சில அரசியல் வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டை அணிந்துகொண்டு தனிநாடு கோரிக்கை தொடர்பான முழக்கங்களை எழுப்பினர். மைதானத்தின் பாதுகாவலர்கள் புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்

 

இந்தியா – இலங்கை போட்டியின் போது ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் மைதானத்தின் மேலே விமானம் பறந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது.

மைதானத்தில் தனி நாடு கோஷம்: இந்திய ரசிகர்கள் கைது! 3
India’s Yuzvendra Chahal (C) celebrates with teammates including captain Virat Kohli (2R) after the dismissal of New Zealand’s captain Kane Williamson during the 2019 Cricket World Cup first semi-final between India and New Zealand at Old Trafford in Manchester, northwest England, on July 9, 2019. (Photo by Dibyangshu Sarkar / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

மழை விட்டுவிட்டு பெய்து வந்ததால், ஆட்டத்தை தொடர முடியாத சூழல் உருவானது. இதனால் நியூசிலாந்தின் எஞ்சிய இன்னிங்ஸூடன் ஆட்டம் இன்று தொடரும் என நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டம் தடைபட்டபோது ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் இன்று தொடர்ந்து விளையாடுவார்கள்.

ஒருவேளை இன்றும் மழை பெய்யும்பட்சத்தில், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *