ஸ்மித்தை திருமணம் செய்ய வேண்டாம், அவர் ஏமாற்றுக்காரர் : ஸ்மித் காதலியிடம் ரசிகர்கள் 1

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என அவர் வருங்கால மனைவிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப் படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவி யில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நட வடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளனர்.தொடர்புடைய படம்

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப் படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப்படிதான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக் கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக் கப் பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் கண்ணீர் பேட்டி அளித்து, மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஸ்மித்தை திருமணம் செய்ய வேண்டாம், அவர் ஏமாற்றுக்காரர் : ஸ்மித் காதலியிடம் ரசிகர்கள் 2

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன், டுபிளிசிஸ் கூறும்போது, ’நான் ஸ்மித்துக்கு மெசேஜ் அனுப்பினேன். அவருக்காக வருந்துகிறேன். யாருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. எனக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. இனி வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால் தான் அவருக்காக மெசேஜ் அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன். அதில், இந்தக் காலக்கட்டத்தை கடந்து மீண்டும் வலுவாக வரு வார் என்று கூறியிருந்தேன். அதை அவர் வரவேற்றிருந்தார்.

 

ஸ்மித் நல்லவர். எங்கள் இருவருக்குள்ளும் நல்ல மரியாதை இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கேப்டன் அவர். மோசமான இடத்தில் அவர் மாட்டிக்கொண்டார். அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டினர் தங்கள் அணியிடமிருந்து உயர்ந்த மதிப்புகளை எதிர் பார்க்கிறார்கள் என்பதன் விளைவுதான் இவ்வளவு கடுமையான தண்டனை என நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள் ளார்.

ஸ்மித்தை திருமணம் செய்ய வேண்டாம், அவர் ஏமாற்றுக்காரர் : ஸ்மித் காதலியிடம் ரசிகர்கள் 3

இந்நிலையில் ஸ்மித், அவர் காதலி டேனி வில்ஸ்-சை இந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக் கிறார். பந்தை சேதப்படுத்திய பிரச்னை காரணமாக, டேனி வில்ஸ்-க்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் அட் வைஸ் செய்துள்ளனர். அதில், ‘ஸ்மித் ஒரு மோசடி பேர்வழி. அவருடனான திருமணத்தை நிறுத்திவிடுங்கள்’ என்று பல ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இன்னொருவர், ‘சட்டம் படித்தவர் நீங்கள். உங்களுக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

‘நீங்கள் வழக்கறிஞராக இருப்பதால் உங்கள் கணவரைதான் நியாயப்படுத்துவீர்கள், அவருக்கு ஆதரவாகத்தான் இருப்பீர்கள்’ என்று கூறியுள்ளார்.

ஸ்மித்தை திருமணம் செய்ய வேண்டாம், அவர் ஏமாற்றுக்காரர் : ஸ்மித் காதலியிடம் ரசிகர்கள் 4

‘இந்த போலியான நபரிடம் இருந்து நீங்கள் விலகிவிட முடியுமா?’ என்று மற்றொரு ரசிகரும், ‘ஸ்மித்தான் மோசடி செய்தார். அதற்கு ஏன் டேனியை ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டும்’ என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கார சார கருத்துகளால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எதற்கும் பதிலளிக்கவில்லை டேனி வில்ஸ்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *