இங்கிலாந்து அணி டி20 போட்டிகளின் பயிற்சியாளராக பால் பார்ப்ரேஸ்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பால் பார்ப்ரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணி எதிர்கொள்ளும் ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், பார்ப்பேஸ் அடுத்த கோடை காலத்தில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் இதற்காக அவர் பல வாய்ப்புகளை மறுக்கிறார்என்றும் கூறப்படுகிறது.
தற்போது ,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர்போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூன் 27 மற்றும் ஜூன் 29) ஆடுகிறது.
81 நாட்கள் பயணமாக இந்திய அணி இன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது