ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு துவக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதை சிறப்பாக செய்து அணியில் நீங்காத இடம் பிடிக்க பலரும் போராடுவார். ஆனால் அப்படி செய்யத் தவறி வெளியேறி அவர்களும் கிரிக்கெட் உலகில் ஏராளம். அப்படி நிலையத்தில் என்று அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து பல சாதனைகளையும் வீரர்கள் படைத்துள்ளனர்.
நாட்டில் குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கி அதி விரைவாக 6 ஆயிரம் ரன்களை ஒருநாள் அரங்கில் கடந்தவர்களில் டாப் 3 வீரர்கள் தான் நாம் இங்கு காண இருக்கிறோம் அவர்களின் பட்டியல் பின்வருமாறு..
3. சச்சின் டெண்டுல்கர் – 133 இன்னிங்ஸ்கள்
கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் நிகழ்த்திய சாதனைகளை விவரிக்க நாளொன்று போதாது. செல்லமாக “கிரிக்கெட் உலகின் கடவுள்” எனவும் அழைக்கப்படுகிறார். ஒருநாள் அரங்கில் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் குவித்தவர் என பல சாதனைகள் இவர் வசம் உள்ளது. இந்திய அணிக்கு நடுகள வீரர் ஆகவும் களமிறங்கி ரன்களை விளாசியுள்ளார். ஆனால் துவக்க வீரராக களமிறங்கிய பின்னரே இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. அதிரடி வீரராக உருமாறினார். அப்படி தூக்கும் வீரராக களம் இறங்கி பத்தாயிரத்துக்கும் மேல் ரன்கள் அடித்துள்ளார் அதில் அதிவிரைவாக 6 ஆயிரம் ரன்களை 133 இன்னிங்ஸ்களில் கடந்தது உலகின் மூன்றாவது அதிவிரைவாக கருதப்படுகிறது.