சமீப கலாமாக மைதானத்திற்கு இந்திய வீரர்களின் பெயர் வைக்கு பழக்கம் அதிகமாகி வருகிறது. முன்னால் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பெயரில் அமெரிக்கவில் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு சமீபத்தில் பெயர் வைக்கப்பட்டது. அதே போல் டெல்லி கிரிக்கெட் மைதனாத்தின் ஒரு நுழைவாயிலுக்கு முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக்கின் பெயர் வைக்கப்பட்டது.
அதே போல் தற்போது முன்னாள் இந்திய சுழற்ப்பந்து வீச்சாளேர் வீரர் பிசன் சிங் பேடியின் பெயர் டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் மற்றொரு நுழைவாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே மைதனத்தின் 3 மற்றும் 4ஆவது நுழைவாயிலுக்கு முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் அஞ்சும் சோப்ராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சும் சோப்ரா இந்திய அணிக்காக ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ளார். இவர் தான் இந்தியாவின் முதல் 10 ஒருநாள் போட்டிகள் விளையாடிய பெண்ணாகும்.
தற்போது, பிசன் சிங் பேடியின் மகன் அங்காட் பேடி இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
பிசன் சிங்க் பேடி இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 1967ல் இருந்து 1979 வரை அவர் மொத்தம் 266 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், இந்திய அணியின் முதல் தரப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளது இவர் மட்டுமே. மொத்தம் 1560 விக்கெட்டுக்ள வீழ்த்தியுள்ளார் பிசன் சிங் பேடி.