வீடியோ : TNPL ல் ரசிகர்கள் மோதல் 1
cricket-fans-fight

சண்டை :

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் போது  ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. சேப்பாக் கீல்லீஸ் அணியினர் 2 ஆம் பாதி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் இருக்கைகளை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(நன்றி : புதிய தலைமுறை)

முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் தொடக்க ஆட்டக்காரருமான என் ஜெகதீசன் 42 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அரை சதம் கண்டார். இதில் 2 சிக்சர்களும் 4 ஃபோர்களும் அடங்கும். பின்னர் வந்த விக்டர் 40 பந்துகளில் 45 ரன்கள் அடித்து  ஓரளவுக்கு சோபிக்க திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

வீடியோ : TNPL ல் ரசிகர்கள் மோதல் 2

எளிதான இலக்கை துரத்த களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க முதலே சரிவை கண்டது. பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சசி தேவும் ஆண்டனி தாசும் அதிரடியாக அட திண்டுக்கல் டிராகன்ஸ் இலக்கை நெருங்கியது. இதில் ஆண்டனி தாஸ் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார்.

அதில் 3 சிக்சர்கள் 3 ஃபோர்கள்  சகிதம் பறக்க விட்டுள்ளார். சசி தேவ் தன் தரப்பில் இருந்து 32 பந்துகளில் 42 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. வீடியோ : TNPL ல் ரசிகர்கள் மோதல் 3

இது போன்ற தேவை இல்லாத செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவது  ஈடுபடுவது வேதனையைத் தருகிறது. மேலும் மைதானத்தில்  அவர்கள் ஈடுபடும் இது போன்ற சண்டைகளால் மொத்த டி என் பி எல் க்கும் களங்கம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *